2022ம் ஆண்டு முதல் உள்நாட்டு விமான சேவை... ஜெட்ஏர்வேஸ் தொடங்குகிறது....

2022ம் ஆண்டு முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க ஜெட் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

2022ம்  ஆண்டு முதல் உள்நாட்டு விமான சேவை... ஜெட்ஏர்வேஸ் தொடங்குகிறது....

2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரிய அளவிலான கடன் பிரச்சனையால் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஒரு கட்டத்தில், கடனையும் திரும்ப செலுத்த முடியாமல், ஊழியர்களுக்கு சம்பளத்தையும் கொடுக்க முடியாமல் தவித்து வந்தது.

தனியார் விமானத் துறையிலேயே கணிசமான பங்குகளை கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ், அனைத்து விதமான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்த பிறகு, கடந்த 2019 ஆம் ஆண்டு தனது சேவையினை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய உரிமையாளரான முராரி லால் ஜலன் மற்றும் கல்ராக் கேபிடல்ஸ் மீண்டும் சேவையை தொடங்க தேசிய தீர்ப்பாயத்திடம் கடந்த ஆண்டு ஒப்புதல் கோரினர். இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இருந்து உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.