"அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர்" - அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவிப்பு!

"அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர்" -  அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவிப்பு!

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர் என்று அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

கவுகாத்தியில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் குறித்து சிவசேனா தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஆதித்யா தாக்கரே, காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் தங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்று பலர் கூறினார்கள்.

ஆனால் சொந்த கட்சியினரே தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாகக் கூறினார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், அசாமில் வெள்ளம் ஏற்பட்டு பலர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளதாகவும், ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் அங்கு ஆனந்தமாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இது பெரும் அவமானத்திற்குரியது என்றும் அமைச்சர் ஆதித்யா தாக்கரே சாடினார்.