பிரபல யாத்திரை ரத்து - அரசு அறிவிப்பால் பக்தர்கள் கவலை

இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

பிரபல யாத்திரை ரத்து -  அரசு அறிவிப்பால் பக்தர்கள் கவலை

இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கன்வர் யாத்திரையை மேற்கொள்ளும் சிவபக்தர்கள்,  கன்வாரியாக்கள் என்று அழைக்கப்படுவர். இந்நிலையில் இந்த ஆண்டு  கன்வர் யாத்திரை நடத்துவது தொடர்பாக உத்தரகாண்ட் அரசு தீவிர ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். கொரோனா 3ஆவது அலை பரவல் அபாயம் மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் பக்கத்து மாநிலங்களில் இருந்து காவல்துறை அனுமதியுடன் லாரிகளில் கங்கை நீரை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.