பிரதமர் மோடி தலைமையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி - ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரதமர் மோடி தலைமையில் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி - ஆளுநர் ஆர்.என்.ரவி

உதகை ராஜ் பவனில் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாட்டை ஆளுநர் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சி மூலமாகவே நாடு வளர்ச்சி அடைய முடியும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

இதனால் உலக நாடுகளை வழிநடத்தும் அளவிற்கு இந்தியா மாற்றம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 800 பில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார். பிரதமர் மோடி தலைமையில் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.