ஷராவதி ஆற்றில் இருந்து உருவாகும் இந்த நீர்வீழ்ச்சியில், தற்போது பெய்து வரும் கனமழையால் சுமார் 293 அடி உயரத்தில் இருந்து 4 கிளைகளாக பிரிந்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பெரும் இரைச்சலுடனும் தண்ணீர் விழும் நீர்வீழ்ச்சிக்கு ‘ரோரா‘ என்றும், தண்ணீர் வேகமாக சீறிப்பாய்ந்து விழும் நீர் வீழ்ச்சிக்கு ‘ராக்கெட்‘ எனவும் பெயரிடப்பட்டு உள்ளது.