நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மகளை மீட்டு தரக்கோரி - தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகார்!!

தனது மகளை நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்டு தரக்கோரி தந்தை திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை நடத்தினர்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மகளை மீட்டு தரக்கோரி - தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகார்!!

கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர் சாலையில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ நாகேஷ். ஓய்வுபெற்ற பொறியாளரான இவர்,  தனது மனைவி, மற்றும் இரண்டு மகள்களுடன், பெங்களூருவில் உள்ள நித்யானந்தரின் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார்.  இந்த நிலையில், இளைய மகள் வருதுனியை தவிர மற்றவர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறினர்.

சிறிது காலம் கழித்து, ஆசிரமத்தில் சென்று தன் மகளை தன்னுடன் அனுப்பும்படி தந்தை கேட்டுள்ளார். இந்நிலையில் பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து வருதுனி வேறு இடத்திற்கு மாற்றி உள்ளதாக கூறியிருக்கின்றனர். இதற்கிடையே, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் வருதுனியின் தந்தை நாகேஷ் வந்து பார்த்தபோது அவர் உள்ளே இருப்பதை கண்டுள்ளார்.

ஆனால் ஆசிரம நிர்வாகிகள் அவரது மகள் இங்கே இல்லை என்று கூறியதை அடுத்து, தன் மகளை மீட்டு தரக்கோரி திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்தில் நாகேஷ் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் கிராமிய காவல் நிலைய காவல் துறையினர் நித்தியானந்தா ஆசிரமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு நாகேஷ் மகள் இல்லை எனத் தெரியவந்தது. தொடர்ந்து  காவல்துறையினர் மற்றும் நாகேஷ் குடும்பத்தினர் ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.