நாடளுமன்ற ஊழியர்களுக்கு 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அச்சத்தில் டெல்லி!

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நூற்றுக்கணக்கான பேருக்கு உறுதியான கொரோனா.

நாடளுமன்ற ஊழியர்களுக்கு 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அச்சத்தில் டெல்லி!

கொரோனா பரவலையொட்டி பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவைகள் கூட்டப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது . தமிழ்நாட்டில் கூட்டத்தொடர் தொடங்கினாலும் மூன்றே நாட்களில் முடிவடைந்ததாக சொல்லப்படுகிறது. இச்சூழலில் நாடாளுமன்றத்தில் ஜனவரி 31ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.   இதுவரை 875 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு ஒமைக்ரானா என கண்டறிய மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்று குடியரசு துணை தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.