கட்சித் தாவல் தடை சட்டம் குறித்து விவாதம் - தி.காங். பதிலடி

கட்சித்தாவல் தடைச்சட்டம் பற்றி முதலில் சுவேந்து அதிகாரி தனது தந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

கட்சித் தாவல் தடை சட்டம் குறித்து விவாதம் - தி.காங். பதிலடி

சமீபத்தில் பாஜகவின் தேசிய துணைத்தலைவராக இருந்த முகுல் ராய் மற்றும் அவரது மகன் சுப்ரான்ஷூ ராய் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸில் 
இணைந்தனர்.

இதனை மறைமுகமாக சாடிய பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரி,  மேற்கு வங்கத்தில் கட்சித்தாவல் தடைச்சட்டம் அமலில் இல்லை என்றும், எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள தான்  3 மாதங்களுக்குள் அச்சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் சுவேந்து அதிகாரியை சாடிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குணல் கோஷ், கட்சித்தாவல் தடைச்சட்டம் பற்றி சுவேந்துக்கு நன்கு தெரியும் என்றால், அதனை அவரது தந்தை சிசிர் அதிகாரிக்கு முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும்,

ஏனெனில் அவர்  பாஜகவில் இணைந்த பின்னரும், திரிணாமுல் எம். பிக்கான பதவியை தக்க வைத்துக்கொண்டிருப்பதாக பதிலடி கொடுத்துள்ளார்.