இந்தியாவின் மிகவும் சிறப்பான இந்து விழா எது என்றால், அது தசரா என்று தான் கூற வேண்டும். பல்வேறு மாநிலங்களில், பல விதமாக கொண்டாடப்படும் இந்த தசரா அல்லது நவராத்திரி பண்டிகை ஆனது, தென்னிந்தியாவில் கொலு வைத்து கொண்டாடப்படும். ஒற்றை கணக்கில் படிகட்டுகள் வைத்து, அதில் சாமி பொம்மைகள் வைப்பது வழக்கம். சமீப காலங்களில் பிரபலங்களை வைத்தும் வரும் நிலையில், உலகளவில் பிரசித்தியான தசரா விழா எங்கு நடத்தப்ப்டும் என்றால், அது மைசூரூ மாளிகையில் தான்.
மேலும் படிக்க | நவராத்திரி விழா...கொலு பொம்மை விற்பனை கண்காட்சி...!
சரித்திரத்தில் முதன்முறை!
பாரம்பரிய அரச முறையில், மைசூரூ சாமுண்டேஷ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து துவங்கும் இந்த விழா, தசமி திதியான் அவிஜயதசமி அன்று முடிகிறது. பல ஆண்டுகளாக மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வரும் இந்த விழா இந்தாண்டோடு 413வது முறை நடக்கிறது. இதனை இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று துவக்கி வைத்தார்.
மைசூரூ ராஜ பரம்பரை மட்டுமே செய்யும் இந்த விழாவில், முதன்முறையாக இந்திய குடியரசு தலைவர் பங்கேற்று, அதனை துவக்கியும் வைத்திருக்கிறார். குறிப்பாக பெண் அதுவும் ஒரு பழங்குடியின் பெண் இந்த விழாவைத் துவக்கி வைத்தது மிகவும் சிறப்பான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | களைகட்டும் மைசூரு தசரா விழா..!
பத்து நாட்கள் கோலாகலம்!
மைசூரூ சாமுண்டேஷ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரங்கள் செய்து, இன்று துவங்கும் தசரா விழாவானது, பத்து நாட்கள் மகாபூஜைகள் செய்து பின், விஜயதசமி அன்று, ஜம்போசவாரி அல்லது கஜபயணம் என அழைக்கப்படும் யானைகள் சவாரி ஊர்வலத்தோடு முடியும். அந்த ஊர்வலத்தில், 750 கிலோ எடை கொண்ட தங்க ஹவுடா எனப்படும் தங்க அம்பாரியை, இந்த ஆண்டும் அபிமன்யூ தலைமையில், யானைகள் புடை சூழ நடக்கும். கம்பீர நடைபோட்டு, ராஜ அலங்காரத்துடன் வரும் யானைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
மேலும் படிக்க | மைசூரு சாலைகளில் கஜபடை!!! தசரா கொண்டாட்டங்கள் தொடக்கம்!!!
கட்டுப்பாடுகளுக்கு பின் கொண்டாட்டம்!
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தசரா திருவிழா எளிமையாக மைசூரு அரண்மனை வளாகத்திலேயே நடந்து முடிந்தது. கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தசரா விழா கர்நாடக அரசால் கோலாகலமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்காக 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ராவணனை எரிக்கத் தயாராகும் பாகுபலி!!!
பாதுகாப்புகளுடன் புடைசூழ் விழா!
தசரா திருவிழாவை அடுத்து மைசூர் நகர் முழுவதும் பிரம்மாண்ட அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மைசூர் அரண்மனை மட்டுமின்றி நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மைசூரு நகர் இரவில் அலங்கார விளக்குகளின் வெளிச்சத்தில் மிதந்து வருகிறது. குடியரசு தலைவர் வருகையை அடுத்து மைசூரு நகர் முழுவதும் காவல் பணிக்காக 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தலைவருடன் மைசூரு ஆளுநர் தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, ஷோபா கரன்லாஜே, மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்டோர் தசரா துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை! உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு!