சாமி சிலைகளை தொட்ட தலித் சிறுவன்.. ரூ.60,000 அபராதம் விதித்த மக்கள்.. ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

21-ம் நூற்றாண்டிலும் தொடரும் தீண்டாமை சம்பவங்கள்..!

சாமி சிலைகளை தொட்ட தலித் சிறுவன்.. ரூ.60,000 அபராதம் விதித்த மக்கள்.. ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

சாமி சிலைகளை தொட்ட சிறுவன்:

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், உல்லேரஹள்ளி கிராமத்தில், கடந்த 13 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பூதம்மா தேவர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்ட தலித் சிறுவன், அங்கிருந்த சாமி உற்சவ சிலைகளை தொட்டதாக கூறப்படுகிறது. 

சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.60,000 அபராதம்:

இதனை கண்ட அந்த ஊரை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர், சிறுவன் சேத்தனின் குடும்பத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியது.

சிறுவனின் குடும்பத்தோடு ஆட்சியர் சாமி தரிசனம்:

தகவலறிந்து உல்லேரஹள்ளி கிராமத்திற்கு நேரில் சென்ற கோலார் மாவட்ட ஆட்சியர் வெங்கடராஜா, தலித் சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினரை அந்த அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்தார்.

 

கடும் நடவடிக்கை பாயும்:

மேலும், 21-ம் நூற்றாண்டில் இதுபோன்ற தீண்டாமை நடைபெறுவது வருத்தம் அளிப்பதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.