தவிக்கும் கேரள மக்கள்: தொடர்ந்து 20 ஆயிரத்தை கடந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு…  

கேரளாவில் கொரோனா நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று கேரளா செல்கிறார்.

தவிக்கும் கேரள மக்கள்: தொடர்ந்து 20 ஆயிரத்தை கடந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு…   

கேரளாவில் கொரோனா நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று கேரளா செல்கிறார்.

கேரளாவில் கொரோனா 2 ஆம் அலை இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை, அங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து வந்த நிலையில் நேற்று மேலும் 18 ஆயிரத்து 582 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் அங்கு பாதிப்பு எண்ணிக்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மத்திய சுகாதாரத்துறையில் 6 பேர் அடங்கிய நிபுணர் குழு கேரளாவில் முகாமிட்டு தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு உதவி வருகிறது.

இந்நிலையில் நிலைமையை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று கேரளா செல்கிறார். அங்கு கோவளம் பகுதியில் முதல்வர் பினராயி விஜயன், மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், மற்றும் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அவருடன் தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய தலைவர் டாக்டர் சுஜீத் கே சிங் மற்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் உடன் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்ப்