நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு.. பெரும் மூச்சு விடும் மக்கள்

நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு.. பெரும் மூச்சு விடும் மக்கள்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் குறைந்து வருகிறது.
Published on

இந்தியாவில் தொடர்ந்து 3 வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. அதன்படி, நேற்றைய பாதிப்பு 5 ஆயிரத்து 476 ஆக இருந்தது. 

இந்நிலையில், இன்று புதிதாக 4 ஆயிரத்து 362 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 14 சதவீதம் குறைவானதாகும். இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,67,315 ஆக அதிகரித்துள்ளது. 

பலி எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அதன்படி, ஒரே நாளில் 66 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,102 ஆக அதிகரித்துள்ளது..

கடந்த 24 மணி நேரத்தில் 9,620 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதன் மூலம், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,98,95 ஆக அதிகரித்துள்ளது. மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது அதே வேகத்தில் குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.  இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,78,90,61,887 ஆக உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com