மேகதாது திட்டத்தை அமல்படுத்த  டி.கே.சிவக்குமார்  உத்தரவு!

மேகதாது திட்டத்தை அமல்படுத்த  டி.கே.சிவக்குமார்  உத்தரவு!

மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூருவின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய காவிரி ஆற்றின் துணை ஆறான மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவெடுத்தது. இதற்காக மத்திய அரசின் ஒப்புதலை பெறும் முயறசியில் கர்நாடக அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தமிழ்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்தும் கூட கடந்த ஆண்டு கர்நாடக நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்தை செயல்படுத்த1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்தது. 

இந்நிலையில், மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார்  உத்தரவிட்டுள்ளார். நேற்று பெங்களூருவில் நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், கர்நாடக அரசின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை பெற அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும் எனவும்,  மேகதாது திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். மேலும் இத்திட்டத்திற்கு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள தீவிரமாக உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.  

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!