கோடிகளும் புகார்களும்..!!!!

கோடிகளும் புகார்களும்..!!!!

டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதேபோன்று, 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கவும் ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது. 

தேர்தல் முன்னேற்பாடுகள்:

இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ள குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக,  கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத்திற்குச் சென்று பல்வேறு "உத்தரவாதங்களை" அளித்து வருகிறார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் மாதம் ரூ.3000 ,வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க 10 லட்சம் அரசு வேலைகள், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 போன்ற உத்தரவாதங்களுடன் அனைவருக்கும் இலவச மற்றும் தரமான மருத்துவம் வழங்கப்படும் என கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார். 

மேலும் தெரிந்துகொள்க: மதுபானக் கொள்கை முதல் டிடிசி பேருந்து வரை: டெல்லி மீதான பாஜகவின் திட்டம் என்ன??

பாஜகவின் அச்சம்:

குஜராத்தில் ஆளும் பாஜக தனது ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு மிகவும் பயப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  குஜராத்தின் மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீலை நீக்க பாஜக முடிவெடுத்ததை அடுத்து கெஜ்ரிவால் இந்த கருத்தைக் கூறியிருந்தார்.

புலனாய்வு துறை சோதனை:

டெல்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த எஃப்ஐஆரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் வீட்டில் சிபிஐ சோதனை செய்தது.

மேலும் தெரிந்துகொள்க: பாஜக கோட்டையை கைப்பற்றுவாரா கெஜ்ரிவால்!!!

20கோடி பேரம் பேசிய பாஜக:

சிசோடியா வீட்டில் சிபிஐ  சோதனை தொடங்கியதும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை பாஜக பேரம் பேசி வருவதாக தகவல் வெளியானது. ஒவ்வொரு எம்.எல்.ஏவையும் விலைக்கு வாங்க பாஜக 20 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. 

மேலும் தெரிந்துகொள்க: பாஜகவில் இணையும் ஒவ்வொரு எம்.எல்.ஏ வுக்கும் ரூ.20 கோடி…ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

பஞ்சாப்பிலும்..:

டெல்லி அரசின் எம்.எல்.ஏக்களை தொடர்ந்து நேற்று பஞ்சாப்பின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடமும் 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவர் ஹர்பால் சிங் சீமா குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் தெரிந்துகொள்க: ஆம் ஆத்மியை வீழ்த்த பாஜகவின் அரசியல் ஆயுதம்...!!!!!

பாஜக மறுப்பு:

ஹர்பால் சிங்கின் இந்த குற்றச்சாட்டு “அடிப்படையற்றது” எனவும் “பொய்களின் மூட்டை” எனவும் பாஜக மறுப்பு தெரிவித்தது.  ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதிகளின் தோல்விகளிலிருந்து மக்களை திசை திருப்பவே இது போன்ற வதந்திகளை பரப்பி வருவதாகவும் கூறியது.

எஃப்ஐஆர்  கோரிக்கை:

இந்தியாவின் ஜனநாயகத்தை ‘கொலை’ செய்ய முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளிக்க இருப்பதாக  கூறியுள்ளார் ஹர்பால் சிங் சீமா.

ஆதாரங்களுடன்..:

”ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏக்களுடன் பாஜக பேரம் பேசிய அழைப்புகளின் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.  ஆதாரங்கள் அளிக்கப்பட்டால் கொல்லப்படுவீர்கள் என்று எம்.எல்.ஏ ஒருவரை மிரட்டிய ஆதாரமும் எங்களிடம் உள்ளது.  இதனடைப்படையில் புகாரை செய்யவுள்ளோம்” என பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவர் ஹர்பால் சிங் சீமா கூறியுள்ளார்.

இதையும் படிக்க: முன்னோக்கி நடக்கும் ராகுல்… பின்னோக்கி போகும் காங்கிரஸ்…