கோவாக்சின் தடுப்பூசியை 6-12 வயது சிறார்களுக்கு செலுத்த அனுமதி - இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்!!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு அவசர கால தடுப்பு மருந்தாக பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை 6-12 வயது சிறார்களுக்கு செலுத்த அனுமதி - இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்!!

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஒமிக்ரான் பரவலுக்கு பின், பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கடந்த மார்ச் மாதம் முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்திடும் வகையில் அனுமதி  கோரி பாரத் பயோடெக் நிறுவனம் துறை ரீதியிலான நிபுணர் குழுவை நாடியது.

மேலும் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்த  2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ சோதனை அறிக்கையையும் துறைரீதியிலான குழுவிடம் சமர்பித்திருந்தது.

இந்த குழு சமீபத்தில்   நிபுணர்குழுவுடன் ஆலோசனை நடத்தி, அது சார்ந்த பரிந்துரைகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வழங்கியது. இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வரையிலான சிறார்களுக்கு அவசர கால தடுப்பூசியாக செலுத்த குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோல் பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசியை 5 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு அவசர கால தேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.