சமாளிக்க முடியவில்லை... கதறும் தலைநகரம்

சமாளிக்க முடியவில்லை... கதறும் தலைநகரம்

டெல்லியில் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுவரை 1,044 பேர் கருப்பூப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். கருப்புப் பூஞ்சை தொற்றிலிருந்து 92 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.எனினும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89-ஆக அதிகரித்துள்ளது என்றார். டெல்லியில், கருப்புப் பூஞ்சைக்கு கிட்டத்தட்ட 10 சதவிகிதம் பேர் இறப்பது தெரிய வந்துள்ளது.