கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - மத்திய அமைச்சர் அவசர ஆலோசனை!!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - மத்திய அமைச்சர் அவசர ஆலோசனை!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இன்று நிபுணர்களைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்துகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தற்போது மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகம், தமிழ்நாடு, அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இன்று டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டி உள்ளார்.

இந்த கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுஜீத் சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தொற்று பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.