மீண்டும் தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை!

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் மட்டும் நோய் தொற்றின் தாக்கம் குறையவில்லை.

மீண்டும் தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை!

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பானது 500-க்கும் கீழ் குறைந்திருக்கிறது.

ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2172 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த கொரோனா பாதிப்போடு ஒப்பிடும்போது 50 சதவீதத்துக்கும் அதிகமாகும். குறிப்பாக மகாராஷ்டிராவில் மட்டும் 15 மாவட்டங்களில் நோய் தொற்றின் தாக்கம் குறையவில்லை. எனவே, இந்த மாவட்டங்களில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 379 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 1,15327 ஆக இருக்கிறது. கேரளாவில் 14 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. இது தவிர இப்போது கேரளாவில் இப்போது ஜிகா வைரஸ் தாக்கமும் அதிகரித்து வருகிறது. எனவே ஜிகா வைரஸை பரவுதல் பற்றி கண்காணிக்க மத்திய குழு ஒன்று கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பர்வீண் பவார், மகாராஷ்டிரா, கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து அந்த மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.