கொரோனா தொற்று இன்னும் நீங்கவில்லை - பிரதமர் மோடி எச்சரிக்கை

கொரோனா தொற்று இன்னும் நீங்கவில்லை எனவும் தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது எனவும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்று இன்னும் நீங்கவில்லை - பிரதமர் மோடி எச்சரிக்கை

ராம நவமி கொண்டாட்டத்தையொட்டி,  குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன தின விழாவில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது கொரோனா பெருந்தொற்று மிகப்பெரும் நெருக்கடி என்றும், இந்த நெருக்கடி ஓய்ந்துவிட்டதாக கூறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தற்போது தொற்று பரவல் நின்றிருக்கலாம். ஆனால்  நாட்டை விட்டு முற்றிலும் நீங்கவில்லை என்றும் விளக்கமளித்தார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 185 கோடி டோஸ் தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது ஒட்டு மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் பெருமைபட கூறினார்.