கொரோனா இரண்டாம் அலை: கர்ப்பிணிகளை அதிகம் தாக்குவதாக எச்சரிக்கை!

கொரோனா முதல் அலையின் போது கர்ப்பிணி பெண்கள் மத்தியில் இருந்த  பாதிப்பு தற்போது இரண்டாம் அலையில் அதிகமாக இருப்பதாக ஐ சி எம் ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை: கர்ப்பிணிகளை அதிகம் தாக்குவதாக எச்சரிக்கை!

கொரோனா முதல் அலையின் போது கர்ப்பிணி பெண்கள் மத்தியில் இருந்த  பாதிப்பு தற்போது இரண்டாம் அலையில் அதிகமாக இருப்பதாக ஐ சி எம் ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இரண்டாம் அலையின் போது 387 கர்ப்பிணிகளில் 111 கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததாகவும் கிட்டத்தட்ட, 28.7 சதவீதம் பேருக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாக தென் பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே முதல் அறையில் 1143 கர்ப்பிணிப் பெண்களில் 162 பெண்களுக்கு மட்டுமே  அதாவது 14.2 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே தொற்று அறிகுறிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆலையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களின் இறப்பு விகிதமும் சற்று அதிகரித்துள்ளது. 387 பெயருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதில் 22 பேர் அதாவது 5.7% இறப்பு விகிதமாக பதிவாகி இருக்கிறது. முதல் அலையின் போது 0.7% இறப்பு எண்ணிக்கை மட்டுமே பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு அலைகளிலும் கிட்டத்தட்ட  1530 கர்ப்பிணிப் பெண்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு அதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் அதில் 2 சதவீத பெண்கள் நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே இந்த நோயின் தீவிரத்தை குறைக்க முடியும் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது