எதுக்கு கிழிக்கனும்....எதுக்கு ஒட்டனும்...எதுக்கு கைதாகனும்..!

எதுக்கு கிழிக்கனும்....எதுக்கு ஒட்டனும்...எதுக்கு கைதாகனும்..!

கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...

சுதந்திர தின விழா:

நாட்டின் 76 வது சுதந்திர தின விழா நேற்று இந்திய மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நாளில் நம் நாட்டிற்காக இரத்தம் சிந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.  

மோதல்:

இந்நிலையில், சுதந்திர தின விழாவையொட்டி, கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில், சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தான் படம் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால், சாவர்க்கரின் படத்தை அகற்றிவிட்டு, திப்பு சுல்தான் படம் ஒட்டப்பட்டுள்ளதாகக் கூறி, இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்ததால் பெரும் பதற்றம் நிலவியது.

144 தடை பிறப்பிப்பு:

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக, தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

தேசியக்கொடி ஏற்றல்:

சுதந்திர தினத்தையொட்டி, கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த இந்த மோதல் சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் போஸ்டர் ஒட்டப்பட்ட இடத்தில் அதிகாரிகள் தேசியக்கொடியை ஏற்றினர். 

கைது:

இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று சாவர்க்கர் போஸ்டர் தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.