பிரேசிலுடனான கோவாக்சின் ஒப்பந்தத்தில் ஊழலா..? மத்திய அரசு பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்...

பிரேசிலுடனான கோவாக்சின் ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு மவுனம் காக்காது பதில் கூறும்படி காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பிரேசிலுடனான கோவாக்சின் ஒப்பந்தத்தில் ஊழலா..? மத்திய அரசு பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்...
பாரத் பயோடெக் தனியார் நிறுவனத்திடம் 2 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்ய பிரேசில் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் ஒப்பந்தத்தில் மாபெரும் ஊழல் நடந்ததாக அந்நாட்டு எதிர்கட்சிகள் பிரச்னையை கிளப்பியதால், அந்த ஒப்பந்தத்தை அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ ரத்து  செய்தார். ஆனால் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் எதுவும் அளிக்காமல் அமைதி காத்து வருகிறது.
 
இந்தநிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட், தடுப்பூசியை உற்பத்தி செய்ய மக்களின் வரிப்பணம் அந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே கேள்வி கேட்கும் உரிமை இருப்பதாக குறிப்பிட்ட அவர், பிரேசிலுடனான கோவாக்சின் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.