அக்.26 ல் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடத்த திட்டம்... 5 மாநில சட்ட சபை தேர்தல் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை...

வரும் 26 ம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும்  மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அக்.26 ல் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடத்த திட்டம்... 5 மாநில சட்ட சபை தேர்தல் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை...

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. அதில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  மிக முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் வலுவை அதிகரிக்கும் விதத்தில் நவம்பர் 1ம் தேதி முதல், உறுப்பினர் சேர்க்கையை நாடு முழுவதும் நடத்த கட்சியின் தலைமை முடிவு செய்து அறிவித்தது. 

இந்நிலையில், வரும் 26ம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தை பொறுத்தவரையில் உறுப்பினர் சேர்க்கையை விரிவாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநில தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.