பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 18 ரூபாய் 42 காசு உயர்த்தி, தற்போது 8 ரூபாய் மட்டுமே குறைத்து மக்களை மத்திய அரசு முட்டாளாக்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு -  மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில், பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரியை மே 2014ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மே 2014ம் ஆண்டு டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 3 ரூபாய் 56 காசும், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாய் 48 காசும் இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், 
அதே வேளையில், 2022ம் ஆண்டு மே 21ம் தேதி அன்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 27 ரூபாய் 90 காசு என தெரிவித்துள்ளார்.  

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு18 ரூபாய் 42 காசு உயர்த்தி, தற்போது லிட்டருக்கு 8 ரூபாய் குறைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பொதுமக்களை எவ்வளவுதான் ஏமாற்றுவீர்கள் என்றும் மத்திய அரசை காட்டமாக விமர்சித்துள்ளார்.