நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் குழு அமைப்பு.!

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில், மூத்த தலைவர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் குழு அமைப்பு.!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் சிந்தனை மாநாடு நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மூத்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை நடத்தப்படுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சோனியா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது.

அர சியல் விவகாரங்கள், பணிக்குழு மற்றும் ஒருங்கிணைப்புக்கான மத்திய திட்டமிடல் குழு என 3 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முன்னாள் தலைவர் ராகுல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அர சியல் விவகாரங்கள் குழுவில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுனா கார்கே, ஆனந்த சர்மா, கே. சி.வேனுகோபால் உள்ளிட்ட 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பணிக்குழுவில் பிரியங்கா காந்தி, அஜய் மக்கான், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக்கான மத்திய திட்டமிடல் குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஜோதிமணி, சச் சின் பைலட், ச சி தரூர் உள்ளிட்ட தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.