அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது - மத்திய அரசு தகவல்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் மின்வெட்டு பிரச்னையில் சிக்கி தவிக்கின்றன.

மேலும், சில நாட்களுக்கும் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், 12 மாநிலங்களில் மின்உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு மறுப்பு தெரிவித்து, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில், அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக உறுதியளித்துள்ளார். தற்போது 72  மில்லியன் டன்னிற்கும் மேல் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும்,  22 மில்லியன் டன் நிலக்கரி பல்வேறு அனல் மின் நிலையங்களில் இருப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர், கூடுதல் தேவையை பூர்த்தி செய்வதற்காக வரலாறு காணாத வகையில் நாள்தோறும் அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.