சமாதானத்துக்கு வந்த பெற்றோர்கள்...மீண்டும் மோதிக்கொண்ட மாணவிகள்...!

சமாதானத்துக்கு வந்த பெற்றோர்கள்...மீண்டும் மோதிக்கொண்ட மாணவிகள்...!

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மாணவிகள் வேறுபள்ளிக்கு மாற்றம்:

புதுச்சேரி லால் பகதூர் சாஸ்திரி வீதியில் இயங்கி வரும், சுப்ரமணி பாரதியார் பெண்கள் அரசு மேல் நிலையப்பள்ளியின் மேற்கூரை, கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து, இப்பள்ளி மாணவிகள் குருசுகுப்பம் பகுதியில் இயங்கி வரும் என்.கே.சி பெண்கள் அரசு பள்ளியில் தற்காலிகமாக படிக்க, பள்ளி கல்வி துறை ஏற்பாடு செய்திருந்தது.

இதையும் படிக்க: அதிமுக ஆட்சியில் அடித்த ஷாக்...ஸ்டாலினுக்கு இப்போ அடிக்கவில்லையா?

இரு பள்ளி மாணவிகளிடையே மோதல்:

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று 12ஆம் வகுப்பு படிக்கும் என்.கே.சி பள்ளி மாணவிகளுக்கும், சுப்ரமணி பாரதியார் பள்ளி மாணவிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த மாணவிகளின் பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் இன்று அழைத்த நிலையில், பொற்றோர்கள் முன்னிலையிலேயே மீண்டும் மாணவிகள் மோதலில் ஈடுபட்டனர். 

நான்கு நாட்கள் விடுமுறை:

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பதட்ட சூழ்நிலையை தணிக்க பெற்றோர்களுடன் மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.