இந்தியாவை அச்சுறுத்தும் சீனா? கிழக்கு லடாக் அருகே மேலும் ஒரு பாலம் கட்டமைப்பு!

இந்தியாவை அச்சுறுத்திடும் வகையில், கிழக்கு லடாக் அருகே மேலும்  ஒரு பாலத்தை சீனா கட்டமைத்துள்ளது.

இந்தியாவை அச்சுறுத்தும் சீனா? கிழக்கு லடாக் அருகே மேலும் ஒரு பாலம் கட்டமைப்பு!

இந்தியாவின் எல்லை பகுதியான கிழக்கு லடாக் அருகே சீனா தனது படைகளை குவித்து கிராமங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் அங்குள்ள பாங்காங் ஏரியின் குறுக்கே பாலம் ஒன்றை கட்டமைத்திருந்தது.

இந்தநிலையில் அதற்கு இணையாக மேலும் ஒரு பாலத்தை சீனா கட்டமைத்து ஏப்ரல் மாதம் அப்பணியை நிறைவு செய்துள்ளது. மேலும் இதன் கட்டுமான பணிக்கு கிரேன் உள்ளிட்டவற்றை கொண்டு வர முதல் பாலம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், செயற்கைக்கோள் புகைப்படங்களில் இது தெள்ளத்தெளிவாக உறுதியாகிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாலம் கட்டப்பட்டபோதே அந்த பகுதியை சீனா சட்டவிரோதமாக  60 ஆண்டுகளாக ஆக்ரமித்துள்ளது என மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.