அருணாச்சல பிரதேசத்தில் 15 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா - இந்தியா கடும் கண்டனம்

அருணாச்சல பிரதேசத்தில் 15 இடங்களின் பெயரை சீனா மாற்றியிருக்கும் நிலையில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் 15 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா - இந்தியா கடும் கண்டனம்

அருணாச்சல பிரதேசத்தில் 15 இடங்களின் பெயரை சீனா மாற்றியிருக்கும் நிலையில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள  மேலும் 15 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியுள்ளது.

8 குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள் மற்றும் ஒரு மலைக்கணவாய் ஆகியவற்றுக்கு சீன, திபெத் மற்றும் ரோமன் எழுத்துகளில் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு அருணாச்சல பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்றும் புதிய பெயர்களை சூட்டுவது இந்த உண்மையை மாற்றாது என்றும் தெரிவித்துள்ளது.