பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க குணநலன் சான்றிதழ் அவசியம்.. பத்திரிக்கையாளர் அதிர்ச்சி.. அதுவும் இந்தியாவில்..!

பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்..!

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க குணநலன் சான்றிதழ் அவசியம்.. பத்திரிக்கையாளர் அதிர்ச்சி.. அதுவும் இந்தியாவில்..!

பிலாஸ்பூரில் பொதுக்கூட்டம்:

இமாசலப்பிரதேசத்தின் பிலாஸ்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

குணநலன் சான்றிதழ்:

இந்நிலையில் இதில் பங்கேற்கும் அனைத்து பத்திரிகையாளர்களும் அடையாள அட்டைக்கு பதிலாக குணநலன் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து ஊடகங்களுக்கும் சர்ச்சை விதி:

தனியாருக்குச் சொந்தமான அச்சு, டிஜிட்டல், செய்தித்தொலைக்காட்சி ஊடகங்களுக்கு மட்டுமின்றி, அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் உள்ளிட்ட அரசு ஊடகங்களுக்கும் இவ்விதி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கமிட்டி அமைப்பு:

சரிபார்ப்புக்காக அமைக்கப்பட்ட கமிட்டி, சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சுதந்திரம் பறிக்கப்படும் நிகழ்வு:

இந்நிலையில் இது ஊடகவியலாளர்களை அவமதிக்கும் செயல் எனவும், ஊடக சுதந்திரம் பறிக்கப்படும் நிகழ்வு எனவும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.