புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்கவைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து, ஸ்மார்ட் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர்? என்று மாவட்ட வாரியாக தகவல் திரட்டி ஒப்படைக்குமாறு சமக்ரா சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க விரைந்து பட்டியலை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சமக்ரா சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
பட்டியல் கிடைத்த உடன், மத்திய, மாநில அரசின் நிதி உதவியைக் கொண்டு அரசுப்பள்ளி மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பணியில் சமக்ரா சிக்ஷா ஈடுபட உள்ளது.