ஞானவாபியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய வழக்கு - நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

ஞானவாபியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு வாரணாசி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஞானவாபியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய வழக்கு - நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து மசூதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மசூதி குளத்தில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கள ஆய்வு முடிவுகளை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ள நிலையில் சிவலிங்க உள்ளதாக கூறப்படும் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில்  ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி இந்து அமைப்புகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.