அரசுக்கு வருவாய் இழப்பு : டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை !!

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்பட 21 இடங்களில், சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

அரசுக்கு வருவாய் இழப்பு : டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை !!

மணீஷ் சிசோடியா

டெல்லியில் ஜி.என்.சி.டி.டி. சட்டம், தொழில் பரிவர்த்தனை விதி, டெல்லி உற்பத்தி வரி சட்டம், டெல்லி உற்பத்தி வரி ஆகியன முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதாக, அண்மையில் தலைமைச் செயலர் புகார் அளித்திருந்தார். குறிப்பாக உற்பத்தி வரித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முறையற்ற வகையில் மதுபான லைசென்ஸ் வழங்குவதில் சலுகைகள் காட்டியதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி

மேலும் சிசோடியாவின் புதிய விதி நடைமுறைக்கு பாஜக, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து துணைநிலை ஆளூநரிடம் புகார் அளித்தன. அதன்பேரில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த  துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனால் அவரது வீட்டில் எந்நேரமும் சிபிஐ சோதனை நடத்த கூடும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

சிபிஐ சோதனை

இந்த நிலையில் இன்று காலை, மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனையை தொடங்கியுள்ளது. இதுதவிர மேலும் 3 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்கள் உள்பட 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கெஜ்ரிவால் கண்டனம்

இதற்கிடையே சோதனை நடைபெற்று வருவதை விமர்சித்து டுவிட் செய்துள்ள முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியின் உயர்தர கல்வி மாடலையும், அதன் அமைச்சரையும் பாராட்டி அமெரிக்க நாளிதழின் முகப்பு பக்கத்தில் இன்று கட்டுரை வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டார். உலக அரங்கில் இந்தியாவை பெருமை அடைய செய்த டெல்லி அமைச்சரின் வீட்டில்  சிபிஐ இந்த சோதனையை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.