பைபார்ஜாய்: இன்னும் 6 மணி நேரத்திற்குள் தீவிர புயல்...வானிலை மையம் எச்சரிக்கை!

பைபார்ஜாய்: இன்னும் 6 மணி நேரத்திற்குள் தீவிர புயல்...வானிலை மையம் எச்சரிக்கை!

‘பைபார்ஜாய்’ புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.  'பைபார்ஜாய்' எனப்பெயரிடப்பட்ட இப்புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிக்க : வெளுத்து வாங்கிய கோடை மழையால்...ஒரு பெண் உயிரிழப்பு!

இதன் மூலம் கேரளா முதல் மராட்டிய மாநிலம் வரையிலான மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'பைபார்ஜாய்' புயல், மேற்கு நோக்கி நகர்ந்து 6 மணி நேரத்திற்குள் தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.