பிவிசி பைப்பில் தண்ணீராய் கொட்டிய பணக் கட்டுகள்..!

லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை அதிகாரியின் சாமர்த்திய செயல்..!

பிவிசி பைப்பில் தண்ணீராய் கொட்டிய பணக் கட்டுகள்..!

கர்நாடகாவில் லஞ்சமாக வாங்கிய பணத்தை பொதுப்பணித்துறை அதிகாரி தண்ணீர் பைப்புக்குள் பதுக்கி வைத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு அதிகாரிகள் மீது அம்மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் ஒரு பகுதியாக கல்புர்கி மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை இணை பொறியாளர் சாந்த கவுடா என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அப்போது தண்ணீர் பைப்பை திறந்த போது அதில் தண்ணீர் வராததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பிளம்பரை வரவழைத்து தண்ணீர் பைப்பை சோதனையிட்டுள்ளனர். அப்போது பைப்பில் தண்ணீர் கொட்டுவது போல் பணம் கொட்டியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சுமார் 25 லட்சம் பணத்தை தண்ணீர் பிடிக்கும் பக்கெட்டை வைத்து பிடித்துள்ளனர். இது குறித்து சாந்த கவுடா-விடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.