பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம்... போக்குவரத்துத்துறை உத்தரவு...

புதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் முறையில் கட்டாயமாக காப்பீடு செய்ய உத்தரவு.

பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம்... போக்குவரத்துத்துறை உத்தரவு...

புதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் முறையில் கட்டாயமாக காப்பீடு செய்ய வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை இணை ஆணையர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிதாக விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் முறையில் காப்பீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, ஓட்டுநர், பயணியர், வாகன உரிமையாளர் என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

எனவே, வாகன பதிவில் ஈடுபடும் அனைவரும் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அறிவுறுத்தல்களை காப்பீடு நிறுவனங்கள் மற்றும் எல்லைக்குள்பட்ட வாகன விநியோகஸ்தர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.