அரசு வேலை பெற லஞ்சம், இளம்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்..!

அரசு வேலை பெற லஞ்சம், இளம்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்..!

கர்நாடகாவில் அரசு வேலை பெற லஞ்சம் கேட்கப்படுவதோடு, இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு வற்புறுத்தப்படுவதாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

அரசு வேலை:

தற்போது அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி லஞ்சம் பெறப்படுவது என்பது அனைத்து மாநிலங்களிலும் பெருகி வரும் ஒன்றாக உள்ளது. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என கூறப்பட்டு வந்தாலும், மிக சாதாரணமாக லஞ்சம் கொடுப்பது நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது. 

மேலும் படிக்க: வெற்றி பெறுமா மகாகத்பந்தன் 2.0?

காங்கிரஸ் எம்.எல்.ஏ.:

கலபுரகியில் செய்தியாளர் சந்திப்பின்போது, ஆளும் பாஜக அரசை சரமாரியாக தாக்கி காங்கிரஸ் எம்.எல். ஏ, பொதுப்பணித்துறை, மின்வாரிய நிறுவனங்களில் உதவி பொறியாளர், ஜூனியர் பொறியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

பெண்கள்களுக்கு பாலியல் கொடுமை:

இந்த ஊழலை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என கூறிய அவர், தகுதி இருக்கும் இளைஞர்களும் அரசு வேலை பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார். குறிப்பாக இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அவர்களை அதிகாரிகள் பலர் பாலியல் ரீதியாக வற்புறுத்துவதாகவும், இந்த விவகாரத்தில் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் மம்தா பானர்ஜி..!

பார்த்தா சாட்டர்ஜி:

சில தினங்களுக்கு முன்னர், ஆசியர் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வாங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சேர்ந்த பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மமதா பானர்ஜியை வீழ்த்துவதற்காகவே ஆளும் பாஜக அரசு இதுபோன்று நடந்து கொள்வதாக விவாதிக்கப்பட்டது.

தற்போது பாஜக அதிகாரிகள் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் அதே போன்ற ஒரு குற்றசாட்டை வைத்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.