"பெரும் பரபரப்பு".. பீகார் முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீச்சு!!

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

"பெரும் பரபரப்பு".. பீகார் முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீச்சு!!

பீகார் மாநிலம் நாளந்தா நகரில் நடைபெற்ற ஜன்சபா நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். சில்வியா பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பாடு செய்யப்ட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் அமர்ந்திருந்த மேடை அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த அசம்பாதவிமும் ஏற்படவில்லை. இதனிடையெ அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நிதிஷ்குமாரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். மேலும் வெடி குண்டு வீச்சு தொடர்பாக ஒருவரை பிடித்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய நிலையில், தற்போது அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.