
காஜிப்பூரில் உள்ள பிரபல பூ சந்தையில், கீழே கிடந்த பையிலிருந்து வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காஜிப்பூரில் உள்ள பூ விற்கும் சந்தையில், மர்மமான முறையில் கருப்பு நிற பை ஒன்று கிடப்பதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியை ஆய்வு செய்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து கருப்பு பையினை பரிசோதித்தனர். அதில் வெடிகுண்டு இருந்தது தெரியவந்ததும், அதனை உடனடியாக செயலிழக்க செய்த அதிகாரிகள், பெரும் உயிர் சேதத்தை தவிர்த்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு சம்பவம் போல், டெல்லியில் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தீட்டிய சதியா என போலீசார் விசாரிக்கின்றனர். பட்டப்பகலில் வெடிகுண்டை வைத்து சென்றது யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.