பாஜகவால் தாக்கப்படும் பிர்சா முண்டாவின் கொள்கைகள்...குற்றஞ்சாட்டிய ராகுல்...

பாஜகவால் தாக்கப்படும் பிர்சா முண்டாவின் கொள்கைகள்...குற்றஞ்சாட்டிய ராகுல்...

பிர்சா முண்டாவின் கொள்கைகள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் தாக்கப்படுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதனால் அரசியல் சாசனத்தில் பாஜக தினமும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று கூறினார்.

நாட்டின் உரிமையாளர்கள்:

காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணம் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள வாஷிம் மாவட்டத்தை அடைந்தது.  அங்கு பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

இதில் உரையாற்றிய ராகுல் காந்தி, பழங்குடியினரே நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் என்றும் அவர்களின் உரிமைகள் முதன்மையானது என்றும் கூறினார்.  பிர்சா முண்டாவின் கொள்கைகள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் தாக்கப்படுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதனால் அரசியல் சாசனத்தை பாஜக தினமும் தாக்கி வருகிறது என்று கூறினார்.  இந்த பேரணியில் பழங்குடியினர் சமுதாய மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாறிவரும் மக்கள் பார்வை:

மற்றுமொரு புறம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், இந்திய ஒற்றுமை பயணம் உண்மையான ராகுல் காந்தியை வெளியே கொண்டு வந்துள்ளது என்றும் காங்கிரஸ் மீதான மக்கள் பார்வையை முற்றிலும் மாற்றியுள்ளது என்றும் கூறியுள்ளார்.  

வாஷிமில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடைபயணம் 69வது நாளை எட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும், காந்தி தலைமையில் நாடு தழுவிய அளவில் நடந்து வரும் நடைபயணத்திற்கும் எந்த மாநிலத் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதன் விளைவை 2024 தேர்தலில்தான் மதிப்பிட முடியும் என்று தெரிவித்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   எம்.எல்.ஏக்கள் மீது இத்தனை பணமோசடி வழக்குகளா...விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!!!