பிரதமர் மோடி ஆட்சியில் இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட பெரிய பூனைகள்!!!!

பிரதமர் மோடி ஆட்சியில் இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட பெரிய பூனைகள்!!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெரிய பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பரப்பளவும் விரிவடைந்துள்ளது. இன்று தனது பிறந்தநாளையொட்டி, நமீபியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறுத்தைகளை மத்தியப் பிரதேசத்தின் குனோ-பால்பூர் காப்பகத்தில் பிரதமர் மோடி திறந்து விட்டார்.

பெரிய பூனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு:

இந்தியாவில் 2014 இல் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை  2018 இல் 2,967 ஆக அதிகரித்துள்ளது. அதே போல, 2015ல் 523 ஆக இருந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை, 2022ல் 674 ஆக அதிகரித்துள்ளது.  இது கடந்த ஆண்டுகளை விட 28.87 சதவீத அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிறுத்தைகளின் எண்ணிக்கைக் குறித்து பார்த்தால் 2014 இல் 7,910 ஆக இருந்த எண்ணிக்கை 2022 இல் 12,852 சிறுத்தைகளாக அதிகரித்துள்ளன.  சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு பகுதிகள்:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டில் 4.90 சதவீதமாக இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகள் 5.03 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசாங்கத்தின் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளை எடுத்துரைத்த அதிகாரிகள், 2014 ஆம் ஆண்டில் 1,61,081.62 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 740 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இருந்தன எனவும் அவற்றின் எண்ணிக்கை இப்போது 1,71,921 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதிகரித்து 981 ஆக உயர்ந்துள்ளாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு மடங்கான புலிகள் எண்ணிக்கை:

இந்தியாவில் 18 மாநிலங்களில் சுமார் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 52 புலிகள் காப்பகங்கள் உள்ளன.  இங்கு உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 75 சதவீத காட்டுப் புலிகள் உள்ளன. 2018 ஆம் ஆண்டிலேயே புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை நாடு அடைந்து  விட்டது இந்தியா.  2022 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ’அண்ணா மாடல்’ vs ’மோடி மாடல்’