வீட்டையே குட்டி காடாக மாற்றிய பெண்

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டையே குட்டி காடாக மாற்றியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டையே குட்டி காடாக மாற்றிய பெண்

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டையே குட்டி காடாக மாற்றியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய நவீன காலத்தில் பலரும் தங்கள் வீட்டில் மாடி தோட்டத்தை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இங்கோ பெண் ஒருவர் தனது வீட்டையே குட்டி காடாக மாற்றியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியில் தான் இந்த குட்டி காடு அமைந்துள்ளது. வீட்டின் பின்புறத்தில் 800 சதுர அடி பரப்பளவில் 450 இனங்களைச் சேர்ந்த  4 ஆயிரம் தாவரங்களை வளர்த்துள்ளார்.

இந்த 450 இனங்களில் 150 இனங்கள் மிகவும் அரிதானவையாம். காட்டை அழித்து நாட்டை அமைத்து வரும் தற்போதைய நவீன உலகில் வீட்டை காடாக மாற்றியிருக்கும் இந்த பெண்ணின் செயலை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.