ஆழ்கடலில் பேனர்...நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தை கொண்டாடும் ரசிகர்கள்...!

நடிகர் அஜித்குமாரின் 30 ஆண்டுகால திரைப்பயணத்தை வரவேற்கும் ரசிகர்கள்...!

ஆழ்கடலில் பேனர்...நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தை கொண்டாடும் ரசிகர்கள்...!

நடிகர் அஜித்குமார், திரைத்துறையில் அடி எடுத்துவைத்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ள நிலையில், புதுச்சேரி ப்ரேஞ்ச் சிட்டி பகுதியை சேர்ந்த அஜித்குமார் ரசிகர்கள் சார்பாக, ஸ்கூபா டைவிங் மூலம் கடலில் பேனர் வைத்து பிரம்மாண்டமாக வரவேற்றுள்ளனர். 

மெக்கானிக்காக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய நடிகர் அஜித், 1992 ல் பிரேம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். பல விளம்பர படங்களில் நடித்து தன்னை படி படியாக மேம்படுத்தி கொண்டவர். மேலும் அஜித் ஒரு பைக் ரேசர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் பல விபத்துகளை சந்தித்திருந்தாலும் கூட அதன் மீதான ஆர்வம் குறையாமல் இன்றுவரை அதனை தொடர்ந்து வருகிறார். 

அமராவதியில் தொடங்கி, இன்று வலிமை வரை இவரது நடிப்பில் 60 க்கும் மேலான திரைப்படங்களில் நடித்துள்ள இவர், திரை பயணத்தில் 30 ஆண்டுகளை கடந்துள்ளார். அதனை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் பல செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி ப்ரேஞ்ச் சிட்டி அஜித்குமார் ரசிகர்கள் சார்பாக நடிகர் அஜித்தின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை முன்னிட்டுஆழ்கடல் நீச்சல் என்று சொல்லக்கூடிய ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்கு அடியில் பேனர் வைத்து அவரின் திரையுலக பயணத்தை பிரமாண்டமாக வரவேற்றுள்ளனர். இது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.