“பேட்ட” விஜய் சேதுபதி போல காதல் ஜோடிகளை வெளுத்து வாங்கிய 4 பேர் கைது!!!

கலப்புத் திருமணம் செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற காதல் ஜோடிகளை தாக்கிய பஜ்ரங்தள் அமைப்பினார்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“பேட்ட” விஜய் சேதுபதி போல காதல் ஜோடிகளை வெளுத்து வாங்கிய 4 பேர் கைது!!!

கர்நாடக மாநிலம்: சிக்கமங்களூரு நகரில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த இளைஞன், இந்து மதத்தை சேர்ந்த பெண்ணைக் காதல் செய்து திருமணம் செய்து கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால், இருவர் வீட்டிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால், நேற்று காதல் ஜோடி கலப்புத் திருமணம் செய்து கொள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும் படிக்க | க்ளாஸ்ரூமுக்கு குடித்து விட்டு போதையில் வந்த ஆசிரியையால் பரபரப்பு!!!

அப்போது அங்கு வந்த பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த 4 பேர் திருமணத்தை தடுத்து நிறுத்தி காதல் ஜோடியை கடுமையாக தாக்கி, பின்பு லவ் ஜிகாத் நடப்பதை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து தகவல் தெரிந்த காவல்துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று காதலனை சிக்மங்களூர் புறநகர் காவல் நிலையத்திற்கும் காதலியை பெண் காவல் நிலையத்திற்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க | பெங்களூரு: வெளுத்து வாங்கும் கனமழையால் மழைநீரில் மூழ்கிய பகுதிகள்..மாநகர் முழுவதும் மஞ்சள் அலர்ட்..!

தாக்குதல் நடத்திய பஜ்ரங்தள் அமைப்பினர்களையும் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, “காதல் ஜோடியை பிரிக்க வேண்டும்! அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என காவல் துறையை வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்ந்த காவல்துறை அதிகாரிகள், காதல் ஜோடியின் பெற்றோர்களை அழைத்து விசாரித்தனர்.

அப்போது, இருவரும் அருகில் உள்ள கிராமத்தில் டீ தோட்டத்தில் கூலி வேலை செய்து வருபவர்கள் என்றும் 18 வயது நிரம்பியவர்கள் அவர்கள் சொந்த விருப்பத்தின் படி திருமணம் செய்து கொள்ள வந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது இளைஞனின் தாய் காவல் நிலையத்தில் வெளியே நின்று கொண்டு தனது மகனை விட்டு விடுங்கள் என கதறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | இங்க என்ன அமளி குமுளி நடக்குது? உங்களுக்கு தத்துவம் தேவையா? - மகிந்திராவை சரமாரியாக கேள்வி!!!

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு திருமணத்தை தடுத்து நிறுத்தி காதல் ஜோடி மீது தாக்குதல் நடத்திய பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் தாக்குதல் நடத்திய 4 பஜ்ரங்தள் அமைப்பினர்களையும் காவல் நிலையத்திலேயே ஜாமீன் வழங்கி விடுதலை செய்யப்பட்டனர். உதனைத் தொடர்ந்து, இன்று காவல் துறை பாதுகாப்புடன் காதல் ஜோடிக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைப்படி திருமணம் நடக்க உள்ளது.

மேலும் படிக்க | புலிகள் சரணாலயம் செல்லும் வழியில் போக்குவரத்துக் கட்டுப்பாடு : உத்தரவை மாற்றியமைக்க முடியாது - உயர் நீதிமன்றம் !!

இது குறித்து, சிக்கமங்களூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா பிரசாந்த் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, ”நேற்று மதியம் 2 மணி அளவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரும் இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவரும் திருமணம் செய்து கொள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென நான்கு பேர் அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர். தீவிர விசாரணை நடத்திய விசாரணையில் இருவரும் மேஜர் என்றும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்தது. பிறகு இளைஞனிடம் புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தாக்கியவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று விசாரித்து வருகிறோம். அத்துமீறி தாக்கியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” என கூறினார்.

குடும்பத்தில் தான் பிரச்சனை என்றால், யார் என்றே தெரியாத வெளியாட்கள் மூலமாகவும் பிரச்சனையாக இருக்கிறது இன்றைய உலகத்தில் வாழும் காதல் ஜோடிகளுக்கு!!!

மேலும் படிக்க | ‘போட்’ விடும் அவல நிலை; வெள்ளத்தில் மூழ்கிய பெங்களூரு!!!