முன்னாள் அமைச்சர் மனைவிக்கு பிடிவாரண்ட்... அறக்கட்டளை மோசடி வழக்கில் உத்தரவு...
முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் மனைவிக்கு பிடிவாரண்ட்

கர்நாடக மாநிலம் பெங்களூர் பள்ளி வளாகத்தில் மன்னிக்கவும் என்ற வாசகத்தை எழுதியுள்ள மர்ம நபா்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
காமக்ஷிபல்யா பகுதி சாந்திதாமா தனியார் பள்ளியின் பள்ளி நுழைவாயில் மற்றும் சுவர்கள், மற்றும் சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் இந்த மன்னிப்பு என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் இதனை பார்த்து அதிரச்சியடைந்தனா். தகவலறிந்து சென்ற காவல்துறையினா், அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் கொண்டு மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
ஆந்திராவில், விளைநிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி, யானை மிதித்து உயிரிழந்ததை அடுத்து, அட்டகாசம் செய்யும் யானையை பிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சித்தூர் மாவட்டம் பலமனேர் குடியத்தம் சாலையில் உள்ள விளைநிலத்தை, சுப்பிரமணியம் என்ற விவசாயி காவல் காத்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற யானை ஒன்று, அவரை மிதித்து தாக்கியதில், சுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, விளைநிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் ஒற்றை யானையை, உடனடியாக பிடிக்க வ்பேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பலமனேர் - தமிழ்நாடு சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.
நாடு முழுவதும் 57 ராஜ்யசபா உறுப்பினர் பதவி இடங்கள் ஜுன் மாத இறுதியில் நிறைவடைகிறது. இதையொட்டி காலியாகும் ராஜ்யசபா பதவிகளுக்கு ஜுன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
திமுக கூட்டணி 4 இடங்களிலும் அதிமுக இரண்டு இடங்களிலும் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.திமுக சார்பில் 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 1 இடத்திற்கு இன்னும் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துடன் கே.எஸ். அழகிரி மல்லுக்கு நிற்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.. எனினும் காங்கிரஸ் தலைமை ப.சிதம்பரத்திற்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர் குழப்பம் நிலவி வருகிறது
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணம் செய்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டது.
இதனை மீறியவர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டது. இந்த நிலையில், தற்போது மகராஷ்டிர மாநிலம் மும்பையிலும் ஹெல்மேட் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களில் இந்த விதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீறுபவர்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிப்பதுடன் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக், என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
மேலும், அவர் மீது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே, கடந்த 10ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான யாசின் மாலிக், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை குற்றவாளி என தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தநிலையில் அவர் இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.