அந்த பாவச்செயலை பாஜக ஒருபோதும் செய்யாது....ராஜ்நாத் சிங்!!!

அந்த பாவச்செயலை பாஜக ஒருபோதும் செய்யாது....ராஜ்நாத் சிங்!!!

இன்று ஊழல் குறித்த விசாரணை தீவிரமாக நடத்தப்படுகிறது.  ஊழல் செய்த பெரிய தலைவர்கள் சிறைச்சாலைக்கு செல்கிறார்கள்.  ஊழல் செய்த தலைவர்கள் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் அவர்களை இந்த அரசு விசாரிக்கும்.

கர்நாடக தேர்தல்:

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ளது.  தேர்தலில் போட்டியிடும் கட்சியின் தலைவர்கள் மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  பாஜக சார்பில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரச்சாரத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய போது காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஊழல் வழக்கு:

பெரிய தலைவர்கள் கடந்த சில காலமாக சிறைக்கு செல்கின்றனர் எனவும் அவர்கள் மீதான விசாரணை திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது எனவும் ராஜ்நாத் சிங் கூறினார். மேலும் ஊழல் செய்தவர்கள் எத்தகைய முக்கியமானவர்களாக இருந்தாலும் அவர்களை இந்த அரசு விசாரிக்கும் எனத் தெரிவித்தார்.

ராஜ்நாத்தின் வாக்கு:

தொடர்ந்து பேசிய அவர், 1975ல் தன்னிச்சையாக எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு மக்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும் லட்சகணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டதையும் யாராலும் ஒருபோதும் மறக்க முடியாது எனக் கூறிய ராஜ்நாத் சிங் இத்தகைய பாவச்செயலை பாஜக அரசு ஒருபோதும் செய்யாது எனவும் வாக்களித்தார்.  

ஊழலற்ற மோடி:

மேலும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பேசுகையில் அவரது ஆட்சியில் 100 பைசா மக்களுக்காக ஒதுக்கப்பட்டால் அதில் 14 பைசா மட்டுமே மக்களை சென்றடையும் எனவும் ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் முழுத்தொகையும் நேரடியாக எவ்வித ஊழலுமின்றி அவர்களது வங்கி கணக்கிற்கு செல்கிறது என தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   கா்நாடக தோ்தல்: அண்ணாமலை பிரசாரம் செய்ய தடைக்கோாிய காங்கிரஸ்...!