மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக...!!!

மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக...!!!

திரிபுரா மற்றும் நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

வாக்குபதிவு:

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றன.  திரிபுராவில் 60 தொகுதிகளுக்கு பிப்ரவரி 16 ஆம் தேதியும் நாகாலாந்து மற்றும் மேகாலயாவின் 60 தொகுதிகளுக்கு பிப்ரவரி 27 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

திரிபுரா:

அதன்படி, திரிபுராவில் 33 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியை  தக்க வைத்துள்ளது.  கடந்த 2018 இல் இடது சாரிகளை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இடது சாரிகள் 14 இடங்களிலும் டிஎம்பி கட்சி 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

நாகலாந்து:

இதே போல், நாகாலாந்தில் பாஜக கூட்டணி 38 இடங்களைக் கைப்பற்றி  ஆட்சி அமைக்கவுள்ளது.  என்பிபி கட்சி 4 இடங்களிலும் என்பிஎஃப் 2 இடங்களிலும் மற்ற கட்சிகள் 16 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

மேகாலயா:

மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 27 இடங்களில் வென்று ஆட்சியமைக்கிறது.  இங்கு பாஜக 3 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

வெற்றி கொண்டாட்டம்:

திரிபுராவில்  தனிப் பெரும்பான்மையுடனும் நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஆட்சியமைக்கிறது.  இதனிடையே, திரிபுரா , நாகாலாந்து மாநிலங்களில் பெற்றுள்ள வெற்றியைக் கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை  அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த திரிபுரா மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் நன்றி:

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், வடகிழக்கு மாநிலங்களில் பெற்றுள்ள வெற்றியானது புதிய சிந்தாந்தகளின் பிரதிபலிப்பு என்று  கூறியுள்ளார்.  நாகாலாந்து மாநில மக்களின் முன்னேற்றத்திற்காக இரட்டை எஞ்ஜின் கொண்ட அரசு தொடர்ந்து செயல்படும் எனவும் வெற்றிக்காக உழைத்த கட்சி தொண்டர்களின் கடின உழைப்புக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  வெற்றி சான்றிதழ் பெற்ற ஈவிகேஎஸ்... பெரிய தோல்வியை சந்தித்த அதிமுக!!!