பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை!

பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை!

கர்நாடகாவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் முழுவீச்சில் பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இதற்கிடையில் நேற்றைய தினம், மக்களை கவரும் வண்ணம் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரசாரம் செய்தார்.

இதையும் படிக்க : சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்...டிக்கெட் வாங்க முண்டியடித்த ரசிகர்களிடையே மோதல்...போலீசார் தடியடி!

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மூதாபிரி பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது உரையாற்றிய அவர், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து வருவதாக புகார் தெரிவித்த பிரதமர், கர்நாடகாவில் பாஜ.க.வுக்கு ஆதரவான அலை வீசுவதை காண முடிவதாக கூறினார். மேலும், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்து வருவதாகவும் பிரதமர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசியவர், கர்நாடகாவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.