தேசிய கொடியுடன் போராடிய பாஜக தேசிய தலைவர்- வீடியோ வைரல்!

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில், தேசிய கொடியை ஏற்ற கொடிகம்பத்துடன் ஜேபி நட்டா போராடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தேசிய கொடியுடன் போராடிய பாஜக தேசிய தலைவர்- வீடியோ வைரல்!

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில், தேசிய கொடியை ஏற்ற கொடிகம்பத்துடன் ஜேபி நட்டா போராடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தேசிய தலைவர் ஜேபி நட்டா தேசிய கொடியேற்ற வந்திருந்தார். அவர்  கொடியை பறக்க விடும் வகையில், கம்பத்தின் உச்சியில்  மடிக்கப்பட்ட நிலையிலிருந்த தேசியக்கொடியின் கயிற்றை பிடித்திழுத்தார்.

ஆனால் கொடி பறக்காமல் போகவே, அதன் கயிற்றை பிடித்து இழுத்தபடி நட்டா போராடினார். இதைக்கண்ட காவல் அதிகாரி, உடனடியாக தேசியக்கொடியை வாங்கி அதனை முழுவதுமாக அவிழ்த்தபடி, அவர் கையில் ஒப்படைக்க, பறந்த நிலையில் தேசியக்கொடி மேலே ஏற்றப்பட்டது.