குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க மேலிடம் உத்தரவு...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில்  பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க மேலிடம் உத்தரவு...

 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்கிறார்.  இந்தநிலையில் நாளைய கூட்டத்தில் மக்களவை  பாஜக உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம்  பங்கேற்க வேண்டும் என அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் அதன் உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.